(கலைச்செல்வன்)

இம்முறை 4 ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.

“சர்வதேச யோகா” தினமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் திகதியை பிரகடனப்படுத்துவதற்கு இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட பிரேரணையை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2014 இல் ஒரு தீர்மானமாக அங்கீகரித்தது.

இலங்கை, தீர்மானத்தை முதலில் ஆதரித்த நாடுகளில் ஒன்றாக இருந்த அதேவேளை, அத்தீர்மானம் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளினால் ஆதரவளிக்கப்பட்டது.

ஆயுர்வேதம் போன்று, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் வடிவங்களின் ஒரு பகுதியாக யோகா உள்ளது. 

2015 இலிருந்து சர்வதேச யோகா தினம் ஆயிரக் கணக்கான யோகா ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் நாடு முழுவதிலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

4 ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதிலுமாக பல்வேறு ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பிரதான பல்கலைக் கழகங்கள் மற்றும் நிலையங்களின் பங்குபற்றுதலுடன் “இளைஞர்களுக்காக யோகா...அனைவருக்குமாக யோகா” என்ற தொனிப்பொருளில் யோகா பயிற்றுவிப்பாளர்கள் நாடு முழுவதிலும் மேற்கொண்டதுடன் யோகா தொடர்பான உரைகள், செயலமர்வுகள் மற்றும் செய்முறை விளக்கங்களையும் நடத்தினர்.

4 ஆவது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்கு, சனிக்கிழமை, 23 ஜுன் காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை, சுதந்திர சதுக்க மைதானத்தில் ஒரு பெரும் பொது யோகா நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சு, டாட்டா மோட்டோர்ஸ் மற்றும் அஷ்டாங்க யோகா மந்திர், செத்சட யோகா நிகேதனய, ஹத்த யோகா நிலையம், ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரண்யம், இலங்கைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மனித மேம்பாட்டு நிலையம், பிரம்ம குமாரி ராஜ யோகா நிலையம், வாழும் கலை, ஆயுஷ் (AAYUSH), மை யோகா லோன் (My Yoga Lounge), சக்தி ஆனந்த யோகா பாடசாலை (மட்டக்களப்பு) போன்ற இலங்கையிலுள்ள பிரசித்தமான யோகா நிலையங்கள் இந்த நிகழ்வுக்காகப் பங்களிக்கின்றன.

எங்களது உடல், மனம் மற்றும் ஆன்மா என்பவற்றுக்கு மீளவும் இளமையூட்டி யோகா, பிரணயாமம் மற்றும் தியானம் என்பவற்றில் பங்குபற்றி அப்பியாசிப்பதற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 

பொது மக்கள் அனைவரிற்கும் இந்த நிகழ்வில் பங்குபற்றுவது இலவசமானதாகும். பதிவு செய்து கொள்வதற்கு தயவு செய்து மின்னஞ்சலை iccrcolombo2@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புவதுடன் மேலதிக தகவல்களுக்கு இந்திய கலாச்சார நிலையத்தை தொலைபேசி இல: 2684698 இல் தொடர்பு கொள்ளவும்.