சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சில முக்கிய நிபந்தனைகள்

Published By: J.G.Stephan

15 Jun, 2018 | 03:23 PM
image

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் நேற்று  தீர்ப்பளித்தது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நேற்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன்படியே இவருக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கான சட்ட விதிமுறைகளே, கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை சிறைவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையையே அவருக்கும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்க முடியும் என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31