(இரோஷா வேலு) 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றுக்கு அருகில் வைத்தே குறித்த சந்தேக நபரை இன்று கைதுசெய்த பொலிஸார் அவரிடமிருந்து 2.300 மில்லிகிராம் ஹேரோயினையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக் குண்டொன்றையும்  மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.