கொழும்பில்  பழம்பெரும் உணவகமான  Grand Oriental Hotel  ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும் வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.

கலாசார பன்முகத்தன்மை குறித்து நாம் பேசும் போது இலங்கையின் ஏனைய உணவு கலாசாரங்களை விட யாழ்ப்பாண கலாசாரம் வித்தியாசமானது. எனவே தமிழ் மக்கள் மட்டுமின்றி பல சிங்கள மக்களும்  தமிழ்  அடையாளத்தை பிரதிபலிக்கும் யாழ்ப்பாண உணவு வகைகளை சுவைத்து உண்கிறார்கள்.

யாழ்ப்பாண மக்கள் முற்காலத்தில் கவலையும் மனஅழுத்தமும் அற்ற  இலகு வாழ்க்கையை நெடுங்காலமாக  அனுபவித்து வந்துள்ளார்கள் என்று வரலாறு பகர்கிறது.  

அவர்கள்  தினமும் மூன்றுவேளை சமைத்து உண்கின்ற உணவில் இரண்டு பிரதான உணவாக இருக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல  நல்ல பழையன  அனைத்தும் மாறி,மறைந்து    விஸ்தீரமான   உணவு விடுதிகள்     தோன்றி   தற்போதைய நிலைக்கு மாறிவிட்டன. 

அதாவது யாழ்.அறுசுவை உணவு விருந்து என்பது ,சுகாதார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் உள்நாட்டு வாசனைத்   திரவியங்கள்,  ஆயுர்வேத  மூலிகைகள்  கலந்தவையாக  தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஆகும். அத்துடன் சகல உணவுகளும் இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, புளிப்பு,  துவர்ப்பு, காரம் எனும் ஆறு சுவைகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவு வகைகளாகவும் கருதப்படுகின்றது. 

குறிப்பாக சிறந்த சமையல் திறனும் அனுபவமும் உள்ள சந்துரு  என்ற சமையல் கலைஞரால் புகழ்பெற்ற சுவைகளை கொண்டுள்ள தனித்துவம் மிக்க உணவு வகைகள் நன்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும்  சகல யாழ்.உணவு வகைகளையும்   அவற்றுக்கே உரிய  பாரம்பரிய முறையில் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.