தங்காலையில் பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரன்த பிரதேசத்தில் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்ற 13 வயதுடைய மாணவி பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார். பின்னர் பாடசாலை ஆசிரியர்களினால் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவியின் சித்தி அவரை பாடசாலையில் இருந்து தங்காலை வைத்தியாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி 8 மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. மாணவி ஆபத்தான நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை மேற்கொண்டு குழந்தையும் மாணவியையும் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் ஹுங்கம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் ரன்த காமோதர பிரதேசத்தை சேர்ந்த, சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 55 வயதுடைய சிறுமியின் உறவினரை கைது செய்துள்ளனர்.