அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக பிரவேசித்து பயணச் சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

நஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

பயணச்சீட்டு பெறுவதற்காக காத்திருந்தவர்கள் வரிசையில் நிர்வாணக் கோலத்தில் காத்திருந்த அந்நபரைக் கண்ட ஏனைய பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொது இடத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்நபர் கைதுசெய்யப்படுவது இது முதல் தடவையல்ல என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே அந்த விமான நிலையத்துக்கு வெளியில் நிர்வாணமான நடமாடிய நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். எனினும் விமான நிலையத்திற்குள் வைத்து அவர் கைதுசெய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.