ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின்  மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் மனித உரிமை  பாதுகாவலர்களிற்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியிதுவென சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் ஓமர் வரைச் தெரிவித்துள்ளார்.

நீதிகோருபவர்களை மிரட்டி மௌமாக்க நினைப்பவர்களிற்கு தெளிவான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.