சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஹேரோயின் மற்றும் துப்பாக்கி என்பவற்றுடன் வெலே சுதாவின் சகா ஒருவரை கைது செய்துள்ளதாக ‍பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள்  தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு பிலியந்தல பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஹேரோயின் போதைப் பொருளும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.