கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால்  உயர்வடைந்துள்ளது.

நுகர்வுப்பொருட்களின் இறக்குமதிச் செலவானது கடந்த வருடம் முதல் காலாண்டில் 1170.5   மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. அந்த தொகையானது இவ்வருடம் முதல் காலாண்டில் 1360.4 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்துள்ளது. 

அதனடிப்படையில் இவ்வருடம் முதல் காலாண்டின் இறக்குமதிச் செலவானது 189.9 மில்லியன் டொலரால் உயர்வடைந்துள்ளது.இது 16.2 சதவீத அதிகரிப்பாகும்  என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

முழு நுகர்வுப்பொருட்களின் இறக்குமதிச் செலவில் உணவு மற்றும் பான வகை இறக்குமதிச்  செலவு 526. 3 மில்லியன் அமெரிக்க டொலராக  பதிவாகி 4.2  சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேபோன்று உணவல்லா நுகர்வுப்பொருட்களின் இறக்குமதிச் செலவானது 834.2  மில்லியன் அமெரிக்க டொலராகவும் வேறு உணவல்லா நுகர்வுப்பொருட்களின் இறக்குமதிச் செலவு 81.3 மில்லியன் அமெரிக்க டொலராகவும்  உயர்வடைந்து 3.7 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.