சர்வதே அளவில் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2018  கால்பந்தாட்டஉலககிண்ணப்போட்டிகள் ரஸ்யாவில் பிரபல பொப் பாடகர் ராப்பி வில்லியம்ஸின் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியுள்ளது

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.இறுதியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இன்றைய முதல் போட்டியில் ரஸ்யாவும் சவுதி அரேபியாவும்பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

இதன்போது  பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தமை விசேட அம்சமாகும்.