இலங்கை கிரிக்கெட் நிறுவன ஆலோசனைக் குழுவில் இணைந்துக் கொள்வதற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன மறுப்புத் தெரிவித்துள்ளார்

இலங்கை கிரிக்கெட்  நிறுவன குழுவில் ஆலோசகர்களாக இணைந்துகொள்ளுமாறு இலங்கையணியின் முன்னாள் வீரர்காளான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன, அரவிந்த டி சில்வா மற்றும் ரொசான் மஹாநாம ஆகியோருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அழைப்பு விடுத்திருந்தார்

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர்  மஹேல ஜெயவர்தன விளையாட்டுத் துறை அமைச்சரின்  அழைப்பிற்குமறுப்பு தெரிவித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்

மஹேல தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,

எனது மதிப்புக்குறிய விளையாட்டுத் துறை தேர்வாளர்களுக்கும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் தெரிவித்துக்கொள்வது, நான் ஒரு வருடம் கிரிக்கெட் குழுவிலும் 6 மாதம் சிறப்பு ஆலோசணைக் குழுவிலும் இருந்தேன் ஆனால் எங்களது எந்த வித பரிந்துரையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே எனக்கு உங்களது அமைப்பில் நம்பிக்கையில்லை. ஆகவே எங்களை பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.