(ஆர்.யசி)
காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் வகிக்கும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முஸ்லிம் பாராளுமான்ற உறுப்பினர் ஒருவர் இந்து மத விவகாரங்களுக்கு பொறுப்பாக பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அரசியல் தரப்பிலும் பொது அமைப்புகள் மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.
கொழும்பில் சில இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த நியமனம் குறித்து அமைச்சரவை ஊடக சந்திப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதனால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் டி.எம்.சுவாமிநாதன் இந்த பிரச்சினையினை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியுருந்தார்.
இந் நிலையிலேயே காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM