இலங்கையின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை  கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா  விளையாட்டுத்துறை அமைச்சரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக முன்னாள் வீரர்களின்  சேவையை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் நலனை கருத்தில் கொண்டு குமார் சங்ககார, மகேலஜயவர்த்தன,அரவிந்த டிசில்வா மற்றும் ரொசான் மகநாமவை நியமிக்குமாறு கேட்;டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு ஆலோசனை வழங்குவதற்கு முத்தையா முரளீதரனை ஆலோசகர் அடிப்படையில் நியமிக்கவேண்டும் எனவும் தெரிவுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இதன் காரணமாக எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடுவதற்கு இது உதவும் எனவும் ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.