இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் செல்ல சிலாபம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி  வழங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் செல்ல  நீதிவான் அனுமதித்ததுடன் அவரது வாகன அனுதிப் பத்திரத்தை அவரிடம் வழங்க மறுத்துள்ளது.