(இராஜதுரை ஹஷான்)
இந்து மத கலாசார பிரிதியமைச்சராக மஸ்தானை நியமித்தமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் சண்குகவரதன் தெரிவித்தார்.
இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பம்பலப்பிடி கதிரேசன் மண்டபத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிபபிடுகையில்.
பாராளுமன்றத்தில் தமிழ் இந்து பிரதிநிகள் இல்லாமையின் காரணமாகவோ அரசாங்கம் முஸ்லிம் இனத்தவருக்கு இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சு பதவியினை வழங்கியுள்ளது. அமைச்சர் சுவாமிநாதனும் இவ்விடயத்திற்கு உடந்தையாக உள்ளார் ஆகவே அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக மஸ்தானை நியமித்தோம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனல் இந்த நடவடிக்கையினால் ஒரு போதும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது.
இதுவரை காலமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சிறந்த நல்லிணக்கம் ஒன்று காணப்பட்டது. அரசாங்கத்தின் தற்போதைய முறையற்ற செயற்பாடு காரணமாக எதிர்காலத்தில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை பாரபட்சம் பாராது மேற்கொண்டிருக்க வேண்டும். பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் பதவிக்கு ரிஷாத் பதியுதினையும், முஸ்லிம் மத விவகார அமைச்சர் பதவியை ஞானசார தேரருக்கும் வழங்கியிருந்தால் நாடு தழுவிய ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கும்.
இதனை தவிர்த்து இந்து மத விடயத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை இந்து மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகவே காணப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM