இந்தியாவின் ஊட்டி-குன்னூர் அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பொழுது உதகை- குன்னூர் இடையேவுள்ள மந்தாடா எனும் இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது கனமழையால் பஸ் நிலைத்தடுமாறி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 9 பேர் பலியானதோடு.. மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே விடாது மழை பெய்து வருகிறது. பஸ் இரண்டாக உடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.