நடிகர் பரத் பெயரிடப்படாத புதிய படத்தில் தொழிலதிபராக நடிக்கிறார்.

பொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 ஆகிய படங்களில் நடித்து வரும் பரத், இனிது இனிது, சார்லஸ் ஷபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகரான சரண் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்து இயக்குநரும், நடிகருமான ஷரண் தெரிவித்ததாவது,

டார்க் திரில்லர் ஜேனரில் உருவாகும் இந்த படத்தில் பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். பாபநாசம் போன்ற குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தயாராகும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

கொடைக்கானலில் அடுத்த மாதம் முதல் படபிடிப்பை தொடங்கவிருக்கிறோம்.’ என்றார்.