பேலியகொட  பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களால் நபரொருவருக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட போது  துப்பாக்கி பிரயோகம் படாமை காரணமாக அருகில் இருந்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர்கள் 21 மற்றும் 14 வயதான இரண்டு இளைஞர்கள் ஆகும்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைது செய்ய பெலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.