(ஆர்.யசி)

முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும் என ஜனாதிபதி அமைச்சரவையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்தும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று காலை தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்­ச­ரவை இணைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது காண­மால்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்கும், யுத்­தத்தில்  உயி­ரி­ழந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கும், யுத்­தத்தில் உபா­தை­க­ளுக்கு உள்­ளன நபர்­க­ளுக்கும் மற்றும் முன்னாள் விடு­த­லைப்­புலி போரா­ளி­க­ளுக்கும் என அனை­வ­ருக்­கு­மான வாழ்­வா­தார நிவா­ரண தொகை வழங்­கப்­ப­டு­வது குறித்து அமைச்சர் சுவா­மி­நாதன் கடந்த அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்­றினை தாக்கல் செய்­தி­ருந்தார்.

 எனினும் இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்ட முன்னாள்  புலி உறுப்­பி­னர்கள் என்ற பதத்தை  அகற்­று­மாறும் அவர்­க­ளுக்கு நிதி நிவா­ர­ணங்­களை செய்­வது புலி­களை ஆத­ரிப்­ப­தற்கு சம­மா­னது என்ற எண்­ணப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஜனா­தி­பதி தெரி­வித்து குறித்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை நிரா­க­ரித்­துள்ளார். 

இந்த நாட்டில் புலி­களை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது, எனினும் முன்­னைய ஆட்­சியில் முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டனர். அவர்­களை அரச நிவா­ரண நிதி­க­ளுக்குள், சாதா­ரண மக்­க­ளுக்கு வழங்­கப்­படும்  உத­வி­களின் கீழ் கொண்­டு­வர முடி­யாது.

 யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய நிதி உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்கள் என்­பன தாம­த­மா­கி­யுள்­ளன. அவர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­களை செய்­து­கொ­டுக்க வேண்டும்.  அதேபோல் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் பாதிக்­கப்­பட்ட ஏனைய பகுதி மக்­க­ளுக்கும் நிவா­ர­ணங்­களை வழங்க வேண்டும். அதற்­கான பிரத்­தி­யேக அமைச்­ச­ரவை பத்­திரம் உள்­ளது. நாம் எவ­ரையும் புறக்­க­ணிக்­க­வில்லை என்றார்.