இன்று அதிகாலை, பதுளை – பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தில் தங்கியிருந்த உரிமையாளர், அவருடைய சகோதரி மற்றும் அவரின் சித்தி ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.