அலவ்வ பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளளனர்.

அலவ்வ-கப்புவரல பகுதியில் இன்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 60 வயதான ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதுருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குறித்த பஸ் எதிரில் வந்த பஸ் ஒன்றோடு மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.