(எம்.எம்.மின்ஹாஜ்)

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்  மாபெரும் புத்த சிலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 94 ஆவது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் மாபெரும் புத்தர் சிலைகளை நிர்மாணிக்கவுள்ளோம். இதன்படி வடக்கு, கிழக்கு  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த வேலைத்திட்டத்தை அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.