இந்திய கர்நாடக மாநில ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி பெற்றமையையடுத்து. சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுபினர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் 12-ம் திகதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தமையால். அத் தொகுதியில்  தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணமடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.

 அந்த தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் 2 முறை குறித்த தொகுதியை தக்க வைத்த  பா.ஜனதா இமமுறை இழந்துவிட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.