நான் இலங்கையின் சனத் ஜெயசூரியவை பார்த்து வளர்ந்தவன் என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர்ஸ்டனிக்ஜாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  முதலாவது டெஸ்டை இந்திய அணிக்கு எதிராக நாளை விளையாடவுள்ள நிலையிலேயே ஆப்கான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது ஆப்கானிஸ்தானின் கனவு.கடந்த பத்து வருடகாலமாக எங்களை பார்த்து சிரித்தவர்கள் கிரிக்கெட்டில் என்ன உள்ளது அதனை விட்டுவிடுங்கள் என தெரிவித்தவர்கள் எல்லாம் எங்களை பாராட்டுகின்றனர்.

இவ்வாறான விமர்சனங்கள் காரணமாகவும் ஆண்டவனின் கருணையாலுமே ஆப்கானிஸ்தான் இன்று டெஸ்ட் அணியாக மாறியுள்ளது.

நாங்கள் எங்கள் டெஸ்டினை இந்தியாவிற்கு எதிராக விளையாடுகின்றோம் எனக்கும் அணியினருக்கும் ஆப்கான் மக்களிற்கும் இது பெருமைக்குரிய தருணம் .

நாங்கள் முதலாவது டெஸ்டை இரசித்து விளையாட முயல்வோம் எந்த வித அழுத்தங்களும் இன்றி விளையாட முயல்வோம்,ஆப்கான் அணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக விளையாடுவதையே விரும்புகின்றனர் எங்கள் கலாச்சாரம் அவ்வாறானது.

நான் சிறுவனாகயிருந்தவேளை சனத்ஜெயசூர்யவை பார்த்து வளர்ந்தேன் எனது கிரிக்கெட் 1996 இல் ஆரம்பமானது.

நான் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவேளை ஜக்கலிஸை இரசித்திருக்கின்றேன்,அதன் பின்னர் பாக்கிஸ்தானின் முகமட் யுசுவினை இரசித்திருக்கின்றேன்.

எங்கள் அணியில் எப்போதும் ஆக்ரோசமாக விளையாடும் வீரர்கள் இருக்கின்றனர்,ரசீத் செசாட் போன்றவர்கள் எப்போதும் ஆக்ரோசமாக விளையாடுபவர்கள் அவர்களை சற்று நிதானமாக விளையாடுமாறு நான்  கேட்டுக்கொள்வது வழமை என அவர் தெரிவித்துள்ளார்.