தேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜூன் மாதம் அம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற நிலைபேறான உணவு விருதுகள் 2018 இந்த உயர் கௌரவிப்பை பொகவந்தலாவ டீ எஸ்டேட்ஸ் எய்தியிருந்தது.

சர்வதேச நிறுவனங்களான சொகோலெரோ எனர்ஜி ட்ரிங் (பெல்ஜியம்), கூப் சுவிட்ஸர்லன்ட் இன்செக்ட் பேஸ்ட் ஃபுட் புரொடக்ட்ஸ் அன்ட் சீமோர்ரூபவ் சீ பேகன் மீட் சப்ஸ்ரிடியுட் (நெதர்லாந்து) போன்றன “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் இறுதி நிலைக்காக போட்டியிட்டிருந்தன.

முக்கியத்துவம் வாய்ந்த நிலைபேறாண்மை உள்ளம்சங்களுக்காக கௌரவிப்பைப் பெற்ற உணவு பான வகையை தெரிவு செய்யும் வகையில் இந்த பிரிவு அமைந்திருந்தது. சர்வதேச உணவு துறையின் நிலைபேறாண்மையை கவனத்தில் கொண்டும், நிலைபேறாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் நேர்த்தியான பங்களிப்பை வழங்குவோரை கௌரவிக்கும் வகையிலும் நிலைபேறான உணவு விருதுகள் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் அமர்ஜித் சஹோடா கருத்துத் தெரிவிக்கையில், “உணவு என்பது தற்போது உலகில் காணப்படும் சூழல் மற்றும் சமூகசார் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.

நிலைபேறாண்மை உணவு விருதுகளை அறிமுகம் செய்வதனூடாக, நிலைபேறான உணவுத் துறையை கட்டியெழுப்ப உதவும் நபர்கள் மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான நிலையை தொடர ஊக்குவிப்போரை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளோரையும் கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

கடந்த ஆண்டு அம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற நிலைபேறான உணவு மாநாட்டில் சிறந்த உதாரணமாக பொகவந்தலாவ கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஃபிரெஷ் புரொடியுஸ் சஞ்சிகையின் பதில் ஆசிரியர் மற்றும் பிரித்தானியாவின் கார்டியன் சஞ்சிகையின் சுயாதீன ஊடகவியலாளரான நினா புல்மன் பொகவந்தலாவ தேயிலை தோட்டத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டு, தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பிரித்தானியாவின் ஹஃபிங்டன் போஸ்ட் சஞ்சிகையில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

இந்நிறுவனத்தின் தலைவர் தினேஷ் அம்பானி கருத்துத் தெரிவிக்கையில்,

 “நிலைபேறாண்மை என்பது எமது உயிரில் கலந்துள்ளது” என்றார். நிலைபேறாண்மை பிரிவின் தலைமை அதிகாரி துசித பண்டார கருத்துத் தெரிவிக்கையில்,

 “சமூக நிதியியல் மற்றும் சூழல் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் எமது செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

இதுவே முன்நோக்கி பயணிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகங்களில்லை” என்றார்.  1869ஆம் ஆண்டு முதல் “Golden Valley of Ceylon Tea”என “பொகவந்தலாவ” அறியப்படுகிறது. பொருத்தமான காலநிலை மற்றும் சூழல் நிலை போன்றன இந்த நிலையை எய்த ஏதுவாக அமைந்திருந்தன.

சிறந்த பாரம்பரியத்துடனும், அதீத ஈடுபாட்டுடனும் பொகவந்தலாவ ஒப்பற்ற காபன் நடுநிலையான தேயிலையை உயர் தரத்தில் வழங்கி வருகிறது. தற்போது நாட்டின் முன்னணி சுப்பர் மார்க்கெட்களிலும், விற்பனை நிலையங்களிலும் விற்பனையாகின்றன. சுமார் 25 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டில் தனது தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.