(நா.தனுஜா)

இலங்கையின் கடல்வள முகாமைத்துவம் மற்றும் மீன்வளம் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு நோர்வேயின் ஆய்வுக் கப்பலொன்று இலங்கை வரவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

 

இலங்கை கடல்வள ஆய்வுக்கான நோர்வே ஆய்வு படகு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்வளம் தொடர்பாக விரிவான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காகவே நோர்வேயின் சிறப்பு ஆய்வாளரான பிரிட்ஜொப் நன்சன் தலைமையில் குறித்த இப் கப்பலானது எதிரவரும் 21 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. 

நோர்வே ஆய்வுக் கப்பலின் வருகையானது மீன்பிடித்துறை சார்ந்த அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்றும் கடல்சார் நீலப்பொருளாதார இயலமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பான கலந்துரையாடலுக்கும் கப்பலின் வருகை அடிப்படையாக அமையும் என்றார்.