திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கொன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதல் திருமணம்  செய்துள்ளார். இத்திருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி, செலவுகளை கட்டுப்படுத்தி  பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அனைவரினதும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.