நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலை புலி இயக்கத்தின் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறற அமைச்சரவையின் கூட்டத்தின் போதே குறித்த இந்த யோசனையை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்தார். 

எனினும் இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் ஜனாதிபதியும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந் நிலையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.