அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பு­டனான வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க உச்­சி­மா­நாட்டில் கலந்துகொள்ள சிங்­கப்­பூரை வந்­த­டைந்­துள்ள  வடகொரியத் தலைவர் கிம் யொங் உன், தனது பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக தனது விமா­னத்­திற்கு மேல­தி­க­மாக வேறு இரு  விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­தி­ய­துடன் இடத்­துக்கு இடம் கொண்­டு­செல்­லக்­கூ­டிய மல­ச­ல­கூட உப­க­ர­ணத்­தையும் அங்கு எடுத்து வந்­துள்­ள­தாக  தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

அவர்  தனது பாது­காப்பை உறுதி செய்ய தனது காருக்கு அருகில் ஓடி­வ­ரு­வ­தற்­காக விசேட மெய்ப்­பா­து­கா­வ­லர்­களை நிய­மித்­தி­ருந்­தமை மற்றும்  தனது காருக்கு முன்னும் பின்னும்  அம்­புலன்ஸ் வண்டி  உள்­ள­டங்­க­லாக 20க்கும் மேற்­பட்ட வாக­னங்கள் மூலம் பாது­காப்பை வழங்க ஏற்­பாடு செய்­தமை  தொடர்­பான தக­வல்கள் ஏற்­க­னவே வெளி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே  மேற்­படி தகவல் வெளி­யா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிம் யொங் உன்  ஐ.எல். -76  விமா­ன­மொன்றில்   தனது சொந்த உணவுப் பொருட்கள்,   எடுத்துச்செல்­லக்­கூ­டிய பிரத்­தி­யேக மல­ச­ல­கூட உப­க­ரணம் உள்­ள­டங்­க­லாக தனது தனிப்­பட்ட பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்­கான  பொருட்கள் சகிதம் சிங்­கப்­பூ­ருக்­கான மேற்­படி விஜ­யத்தை மேற்­கொண்­டுள்­ள­தாக  கொரிய  சொசுன் இல்போ செய்தி  ஊடகம்  தெரி­விக்­கி­றது.

அவர் தனது சிங்­கப்பூர் விஜ­யத்தின் போது எது தான் பயணம் செய்யும் விமானம் என்­பதை ஏனை­ய­வர்கள் அடை­யாளம் காணாமல் இருப்­ப­தற்கு  மேல­தி­க­மாக இரு விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். 

இந்­நி­லையில்   கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் பயணம் செய்த ஐ.எல்.  -76 எயார் சீனா  விமா­னத்­துடன்  சீன போயிங் 747  விமானம் மற்றும்  பழ­மை­யான இலி­யுஷின் ஐ.எல். – - 62 விமானம் என்­பன ஒரு மணித்­தி­யால இடை­வெ­ளியில்  வட கொரி­யாவை விட்டு புறப்­பட்­டுள்­ளன.

தான் பயணம் செய்யும் விமா­னத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி தன்னைக் கொல்ல முயற்சி எடுக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கிம் யொங்  உன்    இந்நடவடிக்கையை எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேசமயம்  தனிப்பட்ட  உள்ளக கழிவகற்றல் வசதியைக் கொண்ட மலசலகூட உபகரணத்தையும்  அவர் சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கடந்த காலங்களில்   உலகத் தலைவர்கள் பலரின் வெளிநாட்டு விஜயங்களின்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும்  அமெரிக்க சி.ஐ.ஏ. புலனாய்வுப் பிரிவும் ஏனைய உளவு முகவர் நிலையங்களும்   மலக்கழிவுகள் மூலம் புலனாய்வு தகவல்களைப் பெற்றதாக அறியப்படுகின்ற நிலையிலேயே   இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மலக்கழிவுகளானது  ஒருவரது தனிப்பட்ட உடல் நலம் குறித்து  பெறுமதிமிக்க தகவல்களை வழங்கக் கூடியவையாகும்.