கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் இன்று ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

14 வயதான குறித்த சிறுவன், மீன் வாங்குவதற்கு தாயிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது நண்பனுடன் கிண்ணியா கட்டையாற்று பாலத்தடிக்குச் சென்ற இருவரும்  கட்டையாற்றில் குளித்து கொண்டிருந்த வேளையில்  பலமான நீரோட்டம் இருந்ததால் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 

பிரதேசவாசிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அது பலனளிக்கவில்லை. சடலம், தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.