இன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் மற்றும் பணியாற்றும் இளம் பெண்கள் மத்தியில் சைஸ் ஜீரோ என்றும் பேலன்ஸ்ட் டயட் என்றும் ஒருவகையினதான உணவு பழக்கம் பிரபலமாகி வருகிறது.

அதே போல் ஒரு சிலர் சைவ உணவுகளை மட்டுமே கொண்ட வெஜிடேரியன் டயட், புரத உணவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பேலியே டயட், மேலை நாடுகளில் பிரபலமான  அட்கின்ஸ் டயட், அதே போல் பிரபலமாக இருக்கும் மெடிட்டேரான்னியன் டயட், சவுட் டயட் என பலவகையான டயட்கள் நடைமுறையில் இருக்கிறது.

அதே போல் தற்போதைய உலகம் வணிக மயமாகிவிட்டதால் உணவுப் பொருள்களிலும் ரசாயானம் கலக்கப்படுகிறது.இதனால் நாம் தினமும் உடலுக்கு ஆரோக்கிய கேட்டினை தரும் உணவுப்பொருள்களை விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடுகிறோம்.

 இதில் சற்று வசதியானவர்கள் இயற்கையான முறையில் விளைந்த ஓர்கானிக் உணவுகளை மட்டுமே தேடி உண்கிறார்கள். இந்த தேடலுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு வேளை இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள்களோ அல்லது பழங்களோ கிடைக்கவில்லை என்றால் இவர்கள் எதையும் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இவர்களுக்கு உளவியல் மருத்துவத்துறையில் ஒர்த்தோரெக்சியா நெர்வாஸோ என்று குறிப்பிடப்படுகிறது.

இவர்களை இயல்பானவர்களாக மாற்றுவது சற்று கடினமானதே. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை சாப்பிடுவது ஆரோக்கியம் தான். ஆனால் அதை மட்டுமே சாப்பிடுவேன் என்பது பிடிவாதம். இதனால் இவர்களின் ஆரோக்கியம் கெடும். இவர்களுக்கு உணவுப் பொருள்களைப் பற்றியும், ஊட்டசத்து நிபுணரையும் வைத்துக் கொண்டு சிகிச்சையும் கலந்தாலோசனையும் கொடுக்கப்படவேண்டும். 

அதன் பிறகே இவர்கள் மெல்ல மெல்ல இயற்கையான உணவுப் பொருள்களுடன் பசியின் போது கிடைக்கும் வேறு வகையினதான உணவுகளையும் சாப்பிடுவார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.