(எம். நியூட்டன்)

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியே முடிவடையும் என தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிததுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். 

வடக்கு மாகாண சபையின் 124 ஆவது சபை அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் இன்று நடைபெற்றது. 

இதன் போதே குறித்த அறிவித்தலை அவைத் தலைவர் சபைக்கு தெரிவித்தார். குறிப்பாக வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவது தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் வெ ளிவருவதால் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் முதலாவது வடக்கு மாகாண சபை முடிவயும் காலம் தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார். 

குறித்த கடிதத்தில்  வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

பல ஊடகங்களில் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் தொடர்பில் மாறுபட்பட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது எனவும்வடக்கு மாகாண  சபைக்கான தேர்தல் கடந்த 21.09.2013 நடைபெற்றாலும் அதனுடைய முதலாவது கூட்டம் கடந்த 25.10.2013 நடைபெற்றது. 

அப்போதைய வடமாகாண ஆளுநர் 15.10.2013 திகதியின் விசேட வர்த்தக மானி அறிவித்தலின் படி நடைபெற்று இருக்கிறது. 

எனவே முதலாவது கூட்டம் 25.10.2013 இல் நடைபெற்றதால் முதலாவது வடக்கு மாகாண சபை 25.10.2018 இல்  முடிவடைவதாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் 154 இ என்ற சரத்துக்கு அமைவாக அந்தக் காலம் முதலாவது கூட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதால் முதலாவது சபை 25 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 இல் முடிவடையும் என்பதை தேர்தல் ஆணையகத்துக்கு தெளிவுபடுத்தி எழுதியுள்ளேன் என்றார்.