இறந்தகால காயங்களை ஆற்றுவதன் மூலம் எதிர்காலத்தை வென்றெடுக்க மேலும் 14 மாவட்டங்கள்

Published By: Sindu

12 Jun, 2018 | 05:03 PM
image

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்ட இறந்தகால காயங்களை ஆற்றுவதன் மூலம் எதிர்காலத்தை வென்றெடுத்தல் செயற்றிட்டத்தை மேலும் 14 மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தேசிய ஒருமைப்படு மற்றும் நல்லிணக்க அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், 

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை  கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதன்மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு 2ஆம் கட்ட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதன்படி அம்பாறை, மட்டக்களப்பு, காலி, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகலை, மன்னார், மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் தேசிய நல்லிணக்க செயற்றிட்டத்தின் அடுத்த கட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 

தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில்  அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகக்குழுக்களை விழிப்பூட்டல், தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மக்களை அறிவூட்டல், பிரதேச அலுவலகங்களூடாக பல்வேறு இன மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது. 

தேசிய ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்க செயற்றிட்டத்தில் பங்குகொள்வதற்காக 20 சிவில் அமைப்புக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் வலுவான ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளதகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25