கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் இன்று அமெரிக்கா - வடகொரியாவிற்கிடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற  எல்லையோர பன்மன்ஜோம் கிராமத்தில் இரு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் எதிர் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.