(கலைச்செல்வன்)

புதிய வகையான கிரகம் ஒன்றினை இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோதி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டு பிடித்துள்ளது.

புதிய கண்டுப்பிடிப்புகளில் உலகளாவிய ரீதியில் நாசாவின் பங்களிப்பு பெரும் அளவில் இருந்தாலும் பூமியை போன்று தோற்றம் அளிக்கும் இக் கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டு பிடித்தமை குறிப்பிடத்தக்கது. 

இக் கிரகமானது பூமியைப் போன்று தோற்றம் அளித்தாலும் இக் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சூரிய குடும்பத்தில் உள்ள புதிய இக் கிரகத்தைச் சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  இருப்பதாக  விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

பூமியை விட 10 மடங்கு பெரியதான இக் கிரகம்  EPIC211945201b அல்லது K2-236 என பெயா் கொண்டு அழைக்கப்படுகின்றது.