(எம்.மனோசித்ரா)

நிபந்தனைகளின் அடிப்படையில் குறைந்த செலவில் நீண்ட கால மின் உற்பத்தி விரிவாக்க திட்டம் 2018 - 2037 க்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரினால் இலங்கை மின்சார சபை மேமாலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறைந்த செலவில் நீண்ட கால மின் உற்பத்தி திட்டம் 2018 -  2037 தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கடந்த வருடம் ஜூலை மாதம் இலங்கை மினாசார சட்டம் 43 (8) இன்  அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டது. 

சுற்று சூழலுக்கு மின் பிரப்பாக்கியால் வெளியிடப்படும் காபன் அளவு, இயலுமானவரை மின்னுற்பத்தி செலவை மிகக் குறைந்தளவில் பராமரித்தல், எதிர்காலத்தில் மின்னுற்பத்தியில் தன்னிறைவு காணுதல் மற்றும் மரபு சார் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியை அதிகரித்தல் என்பன கவனத்தில் இத்திட்டதில் பிரதானமாக கவனத்தில்கொள்ளப்படவுள்ளன. 

இருப்பினும் நீண்டகால மின்னுற்பத்தி விரிவாக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது அரச கொள்கைகளுடன் உடன்பட்டதாகக் காணப்படவில்லை.  எனினும் இவ்வருடம் மே மாதம் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியிருந்தது. எனவே அமைச்சரவை இதனை அங்கீகரித்தன் பிரகாரம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அரச கொள்கைகள் பிரகாரம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.