சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் பின்னர்  அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகள் முழுமையான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சந்திப்பின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை ஜனாதிபதி டிரம்ப் வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முன்வந்துள்ளார் என  தெரிவித்துள்ளது.

அதேவேளை வடகொரிய ஜனாதிபதி கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவது குறித்து தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார் எனவும்  கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

 வடகொரியா தனது அணுவாயுதங்களை கைவிடும் நடவடிக்கையை மிகவிரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் டிரம்ப் உடன்படிக்கை முழுமையானது என குறிப்பிட்டுள்ளதுடன் இரு தலைவர்களும் கடந்தகாலங்களை கைவிட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகம் பாரிய மாற்றத்தை காணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிம்முடன் விசேட உறவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப் வடகொரியாவுடனான உறவு எதிர்காலத்தில் வித்தியாசமானதாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

முன்னதாக உலகமே எதிர்பார்த்த அந்த சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றது.

சிங்கப்பூரின் சென்டொசா தீவில் உள்ள கம்பெலா ஹோட்டலிற்கு முதலி;ல் வட கொரியா ஜனாதிபதியே வந்தார்.

டிரம்பும் கிம்மும் சென்டொசா ஹோட்டலின்  படிக்கட்டுகளில் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டனர்.

இருநாடுகளின் கொடிகளின் முன்னாள் இந்த இரு கைகுலுக்கள் 12 செகன்ட்கள் நீடித்தது.

இரு தலைவர்களும்  தனிப்பட்ட சந்திப்பி;ன் பின்னர்  ஆலோசகர்களுடன் இணைந்து சந்திப்பில் ஈடுபட்டனர்