(பா.ருத்ரகுமார்)
பௌத்த தேரர்களை கைது செய்யும் போது அவர்கள் அங்கத்துவத்தைக்; கொண்டிருக்கும் பீடாதிபதிகளுக்கு உரிய அறிவிப்புக்களை விடுத்து அனுமதி பெறப்பட வேண்டுமென மேல்மாகாண மற்றும் பெருநகரங்கள் அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிக்குகளை கைது செய்யும் விடயத்தில் பொறுப்புணர்வுடனும் விசேட சட்டத்திட்டங்களுக்கேற்பவும் செயற்பட பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பௌத்த பிக்குகள் எமது நாட்டின் மரியாதைக்குறியவர்களாவர். அவர்களை பாதகாப்பது எமது கடமையாகும். 2500 ஆண்டுகளுக்கு முன் கௌதம பிக்கு காலப்பகுதியிலிருந்தே நாம் பௌத்த மதத்தினையும் பிக்குகளையும் வழிபட்டும் அவர்களை பின்பற்றியும் வந்துள்ளோம். அவ்வாறிருக்கும் போது மரியாதைக்குறிய அவர்களை கைது செய்யும் பொது நாம் மிகவும் அவதானமாகவும் கண்ணியத்துடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM