ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனுக்கு பிரதி விவசாய அமைச்சு பதவியும், காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சராக ரஞ்ஜித் அலுவிஹார சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
மேலும், சுற்றாடல் பிரதி அமைச்சராக அஜித் மான்னப்பெரும சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளதுடன், உள்விவகார நடவடிக்கைகள், வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சராக எட்வட் குணசேகர பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அரச நிர்வாக, முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சராக நளின் பண்டார ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM