நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வினிடமிருந்து நான் கற்றுக்கொண்ட யுத்திகளை இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் ‍போட்டியின் போது பிரயோகித்து இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்பேன் என்று ஆப்பாகனிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்ளூர் சின்னசாமி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்திய அணியைப் போன்று துடுப்பாட்ட வரிசயைில் சவால்விடுக்கும் வீரர்கள் ஆப்கான் அணியில் இடம்பெறாவிடினும் பந்து வீச்சில் இந்தி அணிக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இளம் வீரர்களான ரஷித்கான், முஜீப் ஜத்ரன் உள்ளிட்டோர் உள்ளது அணிக்கு பலம் சேர்க்கும். இதற்காக ஆப்கானிஸ்தான் அணியினர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத் தொடர் குறித்து ஆப்கான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் கூறுகையில்,

நான் கிங்ஸ் லெவன் அணியில் இருக்கும்போது பெரும்பாலனா நேரத்தை அஸ்வினுடன் செலவிட்டேன். அவர் அளித்த பல்வேறு அறிவுரைகள், பந்துவீச்சு நுணுக்கங்கள் எனக்கு மிகவும் பலம் சேர்த்தது. எந்த இடத்தில் பந்து வீசினால் துடுப்பாட்டாக்காரர் தடுமாறுவார், புதிய பந்தில் எப்படி பந்து வீசுவது, பந்து தேய்ந்து விட்டால் எப்படி சுழலவிடுவது போன்ற பல்வேறு யுத்திகளையும் அவரிடமிருந்து கற்றேன். அதற்கு நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எனினும் இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியின் போது அஸ்வினிடமிருந்து நான் கற்றுக் கொண்ட அனைத்து நுணுக்கங்களையும் பயன்படுத்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்பேன் என்றார்.