சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் இருவேறு துருவங்களான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் வட கொரியா தலைவர் கிம் யொங் உன்னும் சந்தித்தனர்.

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் யொங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

இந்நிலையில், டிரம்ப் - கிம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் ஜுன் மாதம் 12  ஆம் திகதி நடைபெறும் என்றும், இருவரும்   சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் யொங் உன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஹோட்டலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய த் தலைவர் கிம் யொங் உன் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் தலைவர் கிம் யொங் உன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.