(இரோஷா வேலு) 

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கடத்திய பெண்ணொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

டுபாயிலிருந்து இலங்கை தங்க ஆபரணங்களை கடத்த முற்பட்டபோதே குறித்த பெண்  இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வரக்காப்பொலையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டுபாயிலிருந்து இலங்கை வந்துள்ள குறித்த சந்தேகநபர் தங்க நகைகளை கடத்த முயற்சித்த வேளையில் சுங்க பிரிவின் பரிசோதனை அதிகாரிகளால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். 

இவ்வாறு குறித்த நபரை பரிசோதனைகுட்படுத்திய வேளையில் அவரிடமிருந்து ஒரு கிலோ 244 கிராம் நிறையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் 8 மில்லியன் ரூபா பெறுமதியானவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ள சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.