(இரோஷா வேலு) 

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த சீன பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாலகாரிம மாவத்தையில் வைத்தே இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.