களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானாவுக்கு சொந்தமான இரண்டு மாடி ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் இன்று அதிகாலை(11-06-2018) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தொடங்கொட பொலிஸாருடன் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சேத விபரங்களும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.