ஜி7  உச்­சி­மா­நாடு  குழப்ப நிலையில் நிறைவு

Published By: Vishnu

11 Jun, 2018 | 10:10 AM
image

கன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் இடம்­பெற்ற ஜி7  உச்­சி­மா­நா­டா­னது   அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பிர­த­ம­ருக்கு எதி­ராக கருத்து வெளி­யிட்டு அங்­கத்­துவ நாடு­களால் இணைந்து வெளியிட்ட அறிக்­கையை கைவிட்­ட­தை­ய­டுத்து   குழப்பநிலையில் நேற்று முன்­தினம்  சனிக்­கி­ழமை  நிறை­வு­பெற்­றது.

கனே­டிய பிர­த­மரின் செயற்­பா­டுகள்  தைரியக் குறை­வு­டை­ய­ன­வா­கவும் சாது­வா­ன­தா­கவும் உள்­ள­தாக  டொனால்ட் ட்ரம்ப்  குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.

மேற்­படி உச்­சி­மா­நாட்டில் வர்த்­த­கங்கள் தொடர்பில் அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே  பெரும் முரண்­பாடு நில­வி­ய­தாகத் தெரிவிக்கப்படுகிறது. உருக்கு மற்றும் அலு­மி­னிய இறக்­கு­ம­திகள் தொடர்­பான அமெ­ரிக்­காவின்  சுங்­க­வ­ரிகள் குறித்து அந்த உச்­சி­மா­நாட்டில் அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே கடும் அபிப்­பி­ரா­ய­பேதம்  காணப்­பட்­டது.

அமெ­ரிக்­காவால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள  மேற்­படி  சுங்­க­வரி விதிப்­பு­க­ளுக்கு பதி­லடி நட­வ­டிக்­கையை எதிர்­வரும் ஜூலை முதலாம் திகதி முன்­னெ­டுக்கப்  போவ­தாக  கனே­டிய பிர­தமர் சூளு­ரைத்­துள்ளார்.

இந்­நி­லையில்  டொனால்ட் ட்ரம்ப்  சிங்­கப்­பூரில்  நடை­பெறும் வட கொரிய தலைவருடனான உச்­சி­மா­நாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக விமா­னத்தில் புறப்­ப­டு­கையில் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட செய்­தியில், கனே­டிய பிர­தமர் பொய்­யான தக­வலை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் உண்­மையில் கன­டாவே அமெ­ரிக்க விவ­சா­யிகள், தொழி­லா­ளர்கள் மற்றும்  கம்­ப­னிகள் மீது பாரிய சுங்க வரியை விதித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

கனே­டிய பிர­தமர்   மிகவும் நேர்­மை­யற்ற பல­வீ­ன­மான ஒருவர் எனத் தான் கரு­து­வ­தாக  அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் வர்த்­தகம் தொடர்­பான சர்ச்சை நில­விய நிலை­யிலும்  ஜி7  அங்­கத்­துவ நாடு­களால் இணைந்து வெளி­யி­டப்­பட்ட  அறிக்­கையை அங்­கீ­க­ரித்து ஆரம்­பத்தில் கைச்­சாத்­திட்­டி­ருந்தார். எனினும் பின்னர்  அவர் தனது அங்­கீ­கா­ரத்தை வாபஸ் பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13