சிங்­க­ரா­ஜ­ வனம், கன்­னெ­லிய வனாந்­தரம் மற்றும்  அதனை அண்­டிய அழ­கிய பகு­தி­களை பார்­வை­யி­டு­வ­தற்­காக செல்லும் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­காக சுற்­றுலா விருந்­தோம்பல் இல்­லங்­களை ஆரம்­பிப்­ப­தற்­கான வேலைத்­திட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக வன­வ­ளத்­தி­ணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

குறித்­த ­ப­கு­தி­களில் வீட்­டுடன் ஓர­ளவு இட­வ­ச­தி­யு­ள்ளவர்­களை இணைத்­துக்­கொண்டு இவ் வேலைத்­திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வனாந்­த­ரப்­ப­கு­திகள் மற்றும் வேறு இடங்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு வரும் சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்கு இந்த விருந்­தோம்பல் இல்­லங்­களை வாட­கைக்குக் கொடுக்க முடியும். இத­னூ­டாக இந்த  இல்­லங்­க­ளைச் சூழ­வுள்ள மரக்­க­றிகள், பழ­வ­கைகள் போன்­ற­வற்­றையும் அங்கு தங்கும் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் உண­வுக்­காக பெற்­றுக்­கொள்­ளலாம்.

3 அல்­லது 4 பேர் ­கொண்ட குடும்­பங்­களோ அல்­லது தனி­ந­பர்­களோ இந்த  இல்­லங்­களை வாட­கைக்­குப் ­பெற்­றுக்­கொள்­ளலாம். 2 அல்­லது 3 அறை­க­ளைக்­கொண்ட இந்த இல்­லங்களை சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் நவீ­ன­ம­யப்­ப­டுத்தி வாட­கைக்கு வழங்க ­வேண்­டு­மென வன­வள பாது­காப்புத் திணைக்­களம் இந்த வேலைத்­திட்­டத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

குறித்த இல்­லங்­களை புது­ப்பிக்கவோ நவீ­ன­ம­யப்­ப­டுத்தவோ உலக வங்­கியின் நிதி­யு­த­வியின் கீழ் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் நிவாரண அடிப்படையில் நிதியுதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் இப் பகுதியில் உள்ள மக்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் எனவும்  வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.