வரலாற்றில் மிக முக்கிய சந்திப்பாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

இந் நிலையில்  இன்று சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிம்யொங்கிற்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை தமிழரான சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

அத்துடன் இன்று கனடாவின் கியூபெக் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் ட்ரம்ப், அங்கிருந்து நேரடியாக இன்று மாலை சிங்கப்பூர் செல்லவுள்ளார். 

ட்ரம்பும் கிம்யொங் உன்னும் எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரின் சென்டெசா தீவில் உள்ள கப்பெலா ஹோட்டலில் வைத்து  உத்தியோகவூர்வமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 

இச் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க உலகம் முழுவதிலும் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் ஒழுங்கு முறைகளை மீறியமைக்காக தென்கொரியாவை சேர்ந்த 2 செய்தியாளர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். 

ட்ரம்ப்-யொங் சந்திப்பானது உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சந்திப்பின் முடிவில் வடகொரியா அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட போவதால் இன்னும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.