நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். 

அந்தவகையில் 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலையானது 70 ரூபாவாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.