இராமேஸ்வரத்தில் தொடர்ந்து ஒரு வாரகமாக  நீடிக்கும் பலத்த காற்றினால் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல் முனைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளதுடன் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மணல் புயலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல்முனைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாம்பனில் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதனால் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.