ரி.விரூஷன்

தமிழ் மக்­களின் ஒற்­று­மையை இது­வரை காலமும் பேணிப் பாது­காத்து அப் பலத்­தி­னூ­டாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சிதைத்து, அக் கட்­சி­யினை விட்டுப் பிரிந்து செல்­வது குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் சிந்­திக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் அவ்­வாறு அவர் செய்­வா­ராயின் அது தமிழ் மக்­களின் ஒற்­று­மை­யினை சிதைத்­தமை போன்­ற­தாகும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ளர்கள் யார்  என்­பதை இது­வரை தீர்­மா­னிக்­காத நிலையில் அதனைத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் நெருங்­கி­விட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள சுமந்­தி­ரனின் இல்­லத்தில், சம கால அர­சியல் நிலை­மைகள் குறித்து நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பத்­தி­ரி­கை­யா­ளர்­களால் எழுப்­பப்­பட்ட வினாக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்ட விட­யங்­களைக் குறிப்­பிட்டார்.

அவ­ரிடம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கின் அடுத்த முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்­பிலும், விக்­கி­னேஸ்­வரன் புதிய கூட்­ட­ணியை அமைத்து வெளி­யே­றினால் அதனால் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­படும் போட்டித் தன்மை குறித்தும் கேள்­வி­யெ­ழுப்­பட்­டது. இதற்கு அவர் மேலும்­கூ­று­கையில்,

வடக்கு மாகா­ணத்தின் அடுத்த முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது குறித்து இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. கடந்த மாகாண சபைத் தேர்­தலின் போது, மாவை சேனா­தி­ரா­சாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் எனக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் தீர்­மா­னித்­தி­ருந்­தன.

இருந்த போதிலும் வடக்­கிற்கு முத­லா­வ­தாக மாகா­ண­சபைத் தேர்தல் இடம்­பெ­று­வதால் அதனை வித்­தி­யா­ச­மான முறையில் நடத்த வேண்டும் என்­ப­தற்­காக விக்­கி­னேஸ்­வ­ரனை நிறுத்­தினோம். எமது சிந்­த­னையை ஏற்று மாவை சேனா­தி­ராசா அன்று அதனை விட்­டுக்­கொ­டுத்­த­மை­யா­லேயே இன்று விக்­கி­னேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ரா­க­வுள்ளார்.

குறிப்­பாக அன்று முத­ல­மைச்­ச­ராக விக்­கி­னேஸ்­வரன் பொறுப்­பேற்கும் போது, தான் இரண்டு ஆண்­டுகள் மாத்­தி­ரமே இருப்பேன் எனவும் அதன் பின்னர் மாவை சேனா­தி­ரா­சாவே பொறுப்­பேற்க வேண்டும் எனவும் விக்­கி­னேஸ்­வரன் கூறிய போதும் இன்று முழுக் காலமும் அவரே இருந்­து­விட்டார்.

இந்­நி­லையில் வடக்கு மாகா­ணத்­திற்கு மாத்­தி­ர­மல்ல கிழக்கு மாகா­ணத்­திலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக யாரை நிறுத்த வேண்டும் என்­பது தொடர்­பாக சிந்­திக்க வேண்­டிய காலம் நெருங்­கி­விட்­டது. கடந்த மாகாண சபைத் தேர்­தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே அதிக ஆச­னங்­களை பெற்­றி­ருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு அதனை விட்­டுக்­கொ­டுத்­தி­ருந்­தது.

ஆனால் இம் முறை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே கிழக்­கிலும் முத­ல­மைச்­சரை பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்பம் உள்­ளது. ஆனால் வடக்கில் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் விரும்பிக் கேட்டால் தாம் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க தயா­ராக இருப்­ப­தாக மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­துள்ள நிலையில் இன்­னமும் நாம் யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பாக தீர்­மா­னிக்­க­வில்லை. யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைளை இனி வரும் காலங்­களில் மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இதே­வேளை, வடக்கு மாகா­ணத்தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சரை மீளவும் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்தும் சாத்­திய கூறுகள் இல்லை. அவர் கட்­சி­யோடு முரண்­பட்­டுக்­கொண்டு, தாம் தனிக் கட்சி ஆரம்­பிக்க போவ­தாகக் கூறி வரு­கின்ற நிலையில் அவரை வேட்­பா­ள­ராக நிறுத்த எந்த மானம் மரி­யாதை உள்ள கட்­சியும் சிந்­திக்­காது.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே அவரை வலிந்து அர­சி­ய­லுக்குள் கொண்­டு­வந்து முத­ல­மைச்­ச­ராக்­கி­யி­ருந்­தது. எனவே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து போவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.